மக்களின் பிறவிப் பிணி தீர்க்க வந்த பரிசுத்த ஆவித் தெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் சீர்மிகு திருவடி நிழலில் படிந்து தன்னையறிதல் என்னும் தவ முறையைக் கற்றுத் தேர்ந்த மெய்வழி குழந்தைசாமி கவுண்டர் அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகிய திருவளர் திரு சாலை இரவி அவர்கள் சென்னையில், திரு பெருமாள் ஜானகி தம்பதியரின் கனிஷ்ட புத்திரனாக பாலகிருஷ்ணன் என்னும் நாமத்துடன் திரு பவுல் உயர்நிலைப் பள்ளிக் கல்வியும் மற்றும் பச்சையப்பா கல்லூரியில் மாலை நேர வகுப்பிலும் பயின்று பின்னர் 1977 ஆம் ஆண்டு மெய்வழி சிவசெல்வ அனந்தர் மூலமாக மெய்வழிச்சாலையைக் கேள்வியுற்று அங்கு சென்று இரண்டு வருட காலம் மெய்வழியின் வேத வேதாந்தங்களை கற்று வந்த காலத்தில், தானே சூட்டிக்கொண்ட சாலை இரவி எனும் நாமத்துடன் 1979 ஆம் ஆண்டு மெய்வழி திரு வரதராஜ அனந்தர் அவர்கள் உதவியுடன் மெய்வழி திரு குழந்தைசாமி கவுண்டர் அவர்களை சந்திக்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றார்கள்.அன்றைய தினம் அவர்களின் திருமுன்பாகப் பாடிய பாடலே அவர்கள் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. எதார்த்த சுத்த அறிவுடன் விளங்கும் அப்பெரியாரின் செழுஞ்சீதள மனோ நோக்கிற்கு இணங்கி,சிறகடிக்கும் எண்ணங்களைச் சிந்தையுள் அடக்கி கடும் வைராக்கியத்துடனும் தளராத ஆர்வ சித்தமுடனும் சாகாக் கல்வி எனும் பிரம்மவித்தைச் செயலைப் பழகி, இசைக் கல்லூரியிலும் பயின்று வருகையில் 2002ஆம் ஆண்டு தனது குரு பெருமானின் உத்தரவின் படி அவர்கள் கொடுத்த தொகையுடன் மெய்வழி ஆண்டவர்களின் திருக்குமாரர் ஞான சூரியன் ஸ்ரீலஸ்ரீ சாலை யுகவான் அவர்களின் குருகுல அங்கத்தினராகி 2003ல் அவர்களின் திருமறைவு வரையிலும் அகத்தில் அனைத்தும் அறிந்தும் புறத்தில் ஏதும் அறியாதவர் போன்ற தோற்றத்துடன் அப் பெருமானின் நோக்கமறிந்து நின்றார்கள். அதன் பின்2005ஆம் ஆண்டு தனது முன்னிலைக் குரு பிரானின் திரு முன்பாக தெய்வம் எதற்கு வேண்டும்? பிள்ளையார் சுழி மற்றும் சிவமய பொருள் என்றால் என்ன? என மக்களிடத்தில் அவர்களின் உத்தரவிற்கிணங்கப் பேசியதும், குருபிரான் அவர்கள், பிரசங்கம் சரிதான் ஆனால் அதிகப்பிரசங்கம் கூடாது எனவும்,யாரிடத்தில் எதனைப் பேசவேண்டும் என்பதையும்,உனக்கு புரிந்ததைச் சொல்வதைவிட கேட்பவர்களுக்குப் புரியும் வண்ணம் சொல்ல வேண்டும் எனும் பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய பொன்னான வார்த்தைகளை அருளினார்கள்.இவ்வண்ணம் பட்டை தீட்டப்பட்ட வைரமாக 2008ஆம் ஆண்டு தனது குரு கொண்டலின் திரு மறைவுக்குப் பின் சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பின்னர் காஞ்சிபுரம், ஆற்காடு,வேலூர், அரக்கோணம்,திருத்தணி, திருவள்ளூர், சத்துவாச்சாரி, சிவகாசி, மதுரை மற்றும் 2013ல் மலேஷியா, மற்றும் தூத்துக்குடி போன்ற இடங்களில் ஞானத்தைப் போதித்து வரும் வேளையில் 2019 ஆம் வருடம் சூழ்நிலைகளின் நிர்ப்பந்தம் காரணமாக ஆதி மார்க்க நீதி அவை (AMNA Trust) எனும் மெய் ஞானத்திற்கான அவை தொடங்கப் பெற்று அரசாங்கத்திலும் பதிவு செய்யப் பெற்றது.இன்று பெருந்திரளான மக்கள் கூடி பரிசுத்த ஆவித் தெய்வத்தின் ஆசீர்பாதத்துடன் வேதசாட்சியாக நிஜமான அறிவைப் பெற்றவர்களாகவும் பெறுகின்றவர்களாகவும் பெறுவதற்காகவும் ஆக்கியும் ஆக்கிக்கொண்டும் என்றென்றும் தெய்வத்திரு பாத சேகரனான திருவளர் திரு சாலை இரவி அவர்கள் இதனைத் தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு இறைபணியாற்றி வருகிறார்கள்.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.